முக்கியச் செய்திகள் தமிழகம்

புன்னக்காயலில் உலோக நாணயங்கள், சீன பானை ஓடுகள் கண்டுபிடிப்பு

தமிழர்கள் செல்வச் செழிப்புடனும், வெளிநாட்டு வாணிபத்தில் சிறந்து விளங்கியதற்கான ஆதாரமும் கிடைத்துள்ளதாக தூத்துக்குடி மாவட்ட தொல்லியல் துறை அலுவலர் ஆசைத்தம்பி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் பாதிரியார்கள் ஒரு அச்சகத்தை தொடங்கினர். தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட முதல் அச்சகம் இதுதான். இதைத் தொடங்கியவர் ‘ஹென்டிரிக் ஹென்டிரிக்யூஸ்’ எனும் கிறிஸ்தவ பாதிரியார். இவர் ‘தமிழ் அச்சுக் கலையின் தந்தை’ என்று போற்றப்படுகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

புன்னக்காயலில் 1578-இல் முதன் முதலில் ‘ஞானோபதேசம்’ என்ற நூல் அச்சிடப்பட்டது. அடுத்த ஆண்டு ‘தம்பிரான் வணக்கம்’ அச்சிடப்பட்டது. 1579இல் ‘பாவ சங்கீர்த்தனம்’ வெளியானது. இந்த இரண்டு நூல்களும் ஒன்றாக லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள போட்லியன் நூலகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் முதல் அச்சகம், முதல் தமிழ்க் கல்லூரி, முதல் நூல் எனப் பெருமைகளைக் கொண்டது புன்னக்காயல்.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் புன்னக்காயலை தமிழ்நாட்டின் முதல் அச்சுக்கூடம். முதல் தமிழ் நூல் வெளியான இடம். எனவே ஆய்வு நடத்த அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். அதன் விளைவாக இன்று தூத்துக்குடி மாவட்ட தொல்லியல் துறை அலுவலர் ஆசைத்தம்பி புன்னக்காயலுக்கு வருகை தந்தார்.

அவர் அந்த அச்சுக்கூடம் இருந்த இடத்தினை பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.
அந்த ஆய்வில் அவர் வெளிநாட்டு கண்ணாடி ஜாடிகள், பச்சை நிற உலோக நாணயங்கள் மற்றும் அச்சகம் இருந்ததற்கான ஆதாரங்களையும், இரும்பு பொருட்களையும் கண்டுபிடித்துள்ளார். தொடர்ந்து அப்பகுதி மக்கள், அங்கு ஏற்கனவே கிடைத்த பொருட்களை கொடுத்து, இந்த இடத்தில் தொல்லியல் ஆய்வு செய்ய வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட தொல்லியல் துறை அலுவலர் ஆசைத்தம்பி கூறுகையில், ”தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயலில் தமிழ்நாட்டில் முதன் முதலாக அச்சுக்கூடம் அமைந்தது புன்னக்காயலில் தான். அதை உறுதிப்படுத்தும் ஆதாரம் கிடைத்துள்ளது. எனவே இந்த புன்னக்காயல் பகுதியில் தமிழக தொல்லியல் துறையினர் முறையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில் அந்த கோரிக்கை மனுவை அடிப்படையாகக் கொண்டு இன்று இந்த இடங்களைப் பார்வையிட்டேன். அப்பகுதி மக்கள் 1578ஆம் ஆண்டுகளில் இங்கு அச்சுக்கூடம் இருந்ததற்கான ஆதாரங்களை காட்டினர். அந்த பகுதியில் மேலோட்டமாக கள ஆய்வு மேற்கொண்டேன். அப்போது அங்கு 14 நாயக்கர் கால செப்பு நாணயங்கள் கிடைத்தது. இதன் மூலம் இந்த பகுதியில் அச்சுக் கூடம் இருந்தது உறுதியாகிறது.

மேலும் இங்கு ஒரு பெரிய வளர்ச்சியான நகரம் இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது. கூடுதலாக அதே பகுதியில் சீன பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. இதன் மூலம் இங்கிருந்து வெளிநாடுகளுடன் வாணிபத்தொடர்பு இருந்ததை உறுதிசெய்ய முடிகிறது. இந்த ஆய்வில் கிடைத்த பொருட்களை கொண்டு ஒரு முழுமையான அறிக்கையை தமிழக அரசுக்கு சமர்ப்பிப்போம்” என்று  தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சிறந்த உயர்கல்வி நிறுவனங்கள் பட்டியல்: முதலிடத்தில் நீடிக்கும் சென்னை ஐ.ஐ.டி

Web Editor

டாக்டராக வேண்டும் என்ற மாணவி; உணர்ச்சிவசப்பட்ட பிரதமர்

EZHILARASAN D

ஊழல் செய்ததாக நிரூபித்தால் பொது வாழ்கையில் இருந்து விலகத் தயார்: செல்லூர் ராஜு

EZHILARASAN D