தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் கவுரவ செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர் ஆகியோர் பதவி வகிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் கவுரவ செயலாளர், பொருளாளர், துணைத்தலைவர் ஆகியோர் பதவி வகிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் நிர்வாகிகள் தேர்தல் கடந்த ஆண்டு 2021ஆம் ஆண்டு நவம்பர் 22ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் ஆர்.ராதாகிருஷ்ணன் கவுரவ செயலாளராகவும், எஸ்.சந்திரபிரகாஷ் பொருளாளராகவும், எஸ்.கதிரேசன் துணைத்தலைவராகவும் போட்டியிட்டு வெற்றிப் பெற்றனர்.
கவுன்சில் விதிகளின்படி, தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் நேரடியாக தமிழ் திரைப்படங்கள் தயாரிக்காத இவர்கள் மூவரும் பதவி வகிக்க தடை விதிக்கக்கோரி திரைப்பட தயாரிப்பாளர்கள் கே.ராஜன், பி.டி.செல்வகுமார், என்.சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பொங்கியப்பன், கவுரவச் செயலாளராக ஆர்.ராதாகிருஷ்ணனும், பொருளாளராக எஸ்.சந்திரபிரகாசும், துணைத்தலைவராக கதிரேசனும் பதவி வகிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.