தமிழகத்தில் மே – 2 ம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தவுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து இன்று பிற்பகல் 3 மணிக்கு மேல் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் ஆலோசனை நடத்தவுள்ளார்.
வாக்கு எண்ணிக்கைக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் இந்த ஆலோசனையில் விவாதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.







