தமிழ் சினிமாவின் டான் சிவகார்த்திகேயன்- உதயநிதி

தமிழ் சினிமாவின் டான் சிவகாத்திகேயன் தான் என டான் திரைப்பட டிரையிலர் வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின்  கூறினார்.  லைகா மற்றும் எஸ்கே புரொடெக்‌ஷன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டான்.…

தமிழ் சினிமாவின் டான் சிவகாத்திகேயன் தான் என டான் திரைப்பட டிரையிலர் வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின்  கூறினார். 

லைகா மற்றும் எஸ்கே புரொடெக்‌ஷன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டான். இதில் நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, சிவாங்கி, பால சரவணன் மற்றும் காளி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதுவரையில் 3 பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

டான் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு விழா சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள ஜேப்பியார் கல்லூரியின் உள் அரங்கில் நடைபெற்றது.டான் திரைப்படத்தின் ட்ரெய்லர் விழாவில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,

உண்மையாக சினிமாவில் டான் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். மற்றொரு டான் அனிருத். 10 நாட்களுக்கு முன்பு இந்த படத்தை எனக்கு காட்டினார்கள். இந்த படம் பள்ளியில் நடக்கும் கதை. இது மிகவும் அருமையாக உள்ளது. டாக்டர் படத்தை விட டான் பெரிய படமாக வெற்றி பெறும். கடைசி அரை மணி நேரத்தில் சமுத்திரகனி சிறப்பாக செய்துள்ளார்.

லைகா நிறைய படங்களை எடுக்க வேண்டும் அதை எங்களுக்கே ( ரெட் ஜெயன்ட் ) கொடுக்க வேண்டும். டான் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற படகுழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.