“உள்ளத்தில் தமிழ்.. உலகிற்கு ஆங்கிலம்.. பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கை” – எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி!

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி “உள்ளத்தில் தமிழ்.. உலகிற்கு ஆங்கிலம்.. பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கை” என தெரிவித்துள்ளார்.

"Tamil at heart.. English for the world.. Rational bilingual policy" - Opposition Leader Edappadi Palaniswami!

தாய்மொழிகளின் அவசியத்தையும் அதன் சிறப்புகளையும் மக்களுக்கு எடுத்துரைக்க ஆண்டுதோறும் பிப்ரவரி 21ம் தேதி சர்வதேச தாய்மொழி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1999ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதியை உலகத் தாய்மொழி தினமாக கொண்டாட, யுனெஸ்கோ அமைப்பினால் நடத்தப்பட்ட பொதுமாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, 2000ம் ஆண்டு முதல் உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,

மொழி மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மையைப் பறைசாற்றும் உலகத் தாய்மொழி நாளான இன்று, நம் தாய்நிகர் தமிழ் மொழியைப் போற்றி வணங்குவதுடன், எல்லா மொழிகளுக்கும், எம்மொழி பேசும் மக்களின் உணர்வுகளுக்கும் சமத்துவப் போக்குடன் எப்போதும் மதிப்பளித்து, அதே சமயம் எம்மொழியை நம்மீது எவர் திணிக்கத் துணிந்தாலும் அதனை “உள்ளத்தில் தமிழ்- உலகிற்கு ஆங்கிலம்” என்ற பகுத்தறிவு வாய்ந்த இருமொழிக் கொள்கையால் வெல்வோம் என உறுதியேற்போம்!”

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.