தாம்பரத்தில் மமக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு!

தாம்பரம் மாநகராட்சியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அமைக்கப்பட்ட நீர், மோர் பந்தலை அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் யாக்கூப் திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் இந்தாண்டு கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது.…

தாம்பரம் மாநகராட்சியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அமைக்கப்பட்ட நீர், மோர் பந்தலை அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் யாக்கூப் திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் இந்தாண்டு கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் ஆங்காங்கே தண்ணீர் பந்தலை திறந்துள்ளனர். தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை அக்கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் யாக்கூப் திறந்து வைத்தார்.

மேலும் மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் வெள்ளரிக்காய், மோர், கரும்புச்சாறு உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இதுகுறித்து அக்கட்சியினர் கூறுகையில் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் மமக சார்பில் 50-க்கும் மேற்பட்ட தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு தினமும் தண்ணீர் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

—-வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.