உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களுக்கு கிடைத்த வரவேற்புகளைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் ‘மாமன்னன்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர்.
மேலும் நடிகர் வடிவேலு, பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
https://twitter.com/RedGiantMovies_/status/1652215055558250496?t=Lo7AnaxsffUMreUT_35Lzw&s=08
மாமன்னன் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது. வரும் ஜூன் மாதம், இப்படம் வெளியாகும் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. இந்நிலையில், மாமன்னன் படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







