உணவு தொடர்பாக முதலமைச்சருக்கு மருத்துவர்கள் அட்வைஸ்..!!!

”கருணாநிதியை போல உணவை எடுத்துக் கொள்ளுங்கள்” என மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம்  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் மாதாந்திர உடல் பரிசோதனைக்காக தமிழ்நாடு முதலமைச்சர்…

”கருணாநிதியை போல உணவை எடுத்துக் கொள்ளுங்கள்” என மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம்  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் மாதாந்திர உடல் பரிசோதனைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி வேகமாக பரவிய நிலையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டது.

இன்று காலை  வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை முடிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது இல்லம் புறப்பட்டு சென்றார். இந்த நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி போல உணவை எடுத்துக் கொள்ளுங்கள் என முதலமைச்சருக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

உணவில் கட்டுப்பாடு வேண்டும் என தெரிவித்த மருத்துவர்கள், பல நேரங்களில் தாமதமாக உணவு அருந்துவதும், தண்ணீரின் அளவை குறைவாக எடுத்துக் கொள்வதாலும் வயிற்றில் உபாதை ஏற்படுவதாக தெரிவித்தனர்.

அதேபோல காலை நேரத்தில் இட்லி சாம்பாரை விரும்பி சாப்பிடும் முதல்வர், புரத உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் முன்னாள் முதல்வர் கருணாநிதியை போல, வேர்க்கடலை, பாதாம், வேகவைத்த பயிறுகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் சுற்றுப்பயணம் செல்லும்போது வெளி இடங்களில் கிடைத்த உணவை உண்பதை குறைக்க வேண்டும். குறிப்பாக எண்ணெய் உணவை தவிர்க்க வேண்டும். மதிய உணவை உட்கொண்ட பிறகு முதலமைச்சர் சற்று நேரம் ஓய்வு எடுக்க வேண்டும். இரவு நேரத்தில் அதிகமாக கண் விழிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.