முக்கியச் செய்திகள் விளையாட்டு

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் : இங்கிலாந்தை வீழ்த்தியது அயர்லாந்து

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில், இங்கிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்திடம் தோல்வி அடைந்தது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி அயர்லாந்து அணியை எதிர்கொண்டது. மழை பெய்ததன் காரணமாக 45 நிமிட நேரம் தாமதமாக இப்போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி அயர்லாந்து அணியின் கேப்டன் பல் பிரீனும், பால் ஸ்டிர்லிங்கும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 9 பந்துகள் வீசப்பட்ட நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது. மழை நின்ற பின்னர் தொடரப்பட்ட இப்போட்டியில் அயர்லாந்து கேப்டன் பல்பிரீன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களைக் குவித்தார். இறுதியாக அயர்லாந்து அணி 19.2 ஓவரில் 157 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக பால்பிரீன் 62 ரன்களும், டக்கர் 34 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் மார்க்வுட், லிவ்விங்ஸ்டோன் தலா 3 விக்கெட்டும், சாம்கரண் 2 விக்கெட்டும் பென்ஸ்டோக்ஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. கேப்டனும், தொடக்க வீரருமான பட்லர் முதல் ஓவரிலேயே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அலெக்ஸ், பென் ஸ்டோக்ஸ், ப்ரோக், மலான் ஆகியோரும் சொற்ப ரன்களில் வெளியேற, இங்கிலாந்து அணி 13.1 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 86 ரன்கள் குவித்து தடுமாறியது.

 

பின்னர் களமிறங்கிய மொயின் அலி அதிரடியாக விளையாடி 12 பந்துகளில் 24 ரன்கள் குவித்து களத்தில் இருந்த நிலையில், மழை மீண்டும் குறுக்கிட்டது. இங்கிலாந்து அணி 14.3 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்திருந்தது. மழை நீண்ட நேரம் நீடித்ததால் டக் வொர்த் லூயிஸ் முறை பின்பற்றப்பட்டது. இதன்மூலம் அயர்லாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அயர்லாந்து அணியிடம் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் புதிதாக 1,682 பேருக்கு கொரோனா பாதிப்பு

G SaravanaKumar

“நீட் தேர்வு தடைச் சட்டத்தை தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும்” – திருமாவளவன்

Jeba Arul Robinson

மாணவர்களை மீட்க மத்திய அரசு அக்கறை செலுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Halley Karthik