முக்கியச் செய்திகள் விளையாட்டு

டி20 கிரிக்கெட்; இந்திய மகளிர் அணி அறிவிப்பு- பிசிசிஐ

மகளிர் டி20 தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடும் இந்திய மகளிர் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய மகளிர் அணியினர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளனர். இவ்விரு அணிகள் இடையிலான முதல் டி20 போட்டில் மும்பை டிஒய் பட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி கிரிக்கெட் மைதானத்தில் டிசம்பர் 9ம் தேதி தொடங்குகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இந்தத் தொடருக்கான இந்திய மகளிர் அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் தலைமை தாங்குகிறார். ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பூஜா வஸ்ட்ராக்கர் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை. டிசம்பர் 9ம் தேதி தொடங்கும் போட்டிகள் டிசம்பர் 11, 14, 17, 20 ஆகிய தேதிகளில் மஹாராஷ்டிரா மாநிலத்தின் டி ஒய் பட்டில் மற்றும் CCI பிரபோர்ன் மைதானங்களில் நடைபெறவுள்ளன.

இந்த போட்டியில் இந்திய பெண்கள் அணியில், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா, யாஷ்டிகா பாடியா (விக்கெட் கீப்பர்), ஜெமிமா ரோட்ரிகஸ், தீப்தி ஷர்மா, ராதா யாதவ், ராஜேஷ்வரி கெய்க்வாட், ரேனுகா சிங் தாகூர், மேக்னா சிங், அஞ்சலி ஷர்வானி, தேவிகா வாய்ட்யா, எஸ் மேக்னா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஹார்லின் டியோல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பயிற்சி பந்து வீச்சாளர்களாக மோனிகா பட்டேல், அருந்ததி ரெட்டி, எஸ்பி போகர்கர், சிம்ரன் பகதூர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நகல் மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பிப்பது எப்படி?

Arivazhagan Chinnasamy

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: பிரதமர் மோடி பங்கேற்பு

Web Editor

டாக்டராக வேண்டும் என்ற மாணவி; உணர்ச்சிவசப்பட்ட பிரதமர்

EZHILARASAN D