திருவாரூரில் 4 பேருக்கு பன்றி காய்ச்சல்…  ஒருவருக்கு கொரோனா தொற்று!

திருவாரூரில் 4 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.  மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட 4 பேருக்கு பன்றி காய்ச்சல்…

திருவாரூரில் 4 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.  மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட 4 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனைத் தொடர்ந்து அவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதில் 65 வயதுடைய மூதாட்டி ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து திருவாரூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் கூறுகையில்,  “குளிர்காலங்களில் பரவுகின்ற எச்1என்1 வைரஸ் தொற்று பாதித்து 3 பெண்கள் மற்றும் ஒரு நபர் உட்பட 4 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  இதனை பன்றிக்காய்ச்சல் எனவும் சொல்லலாம்.  பன்றிக் காய்ச்சல் என்றால் பொதுமக்கள் அச்சமடைந்து விடுவார்கள்” என்றார்.

இதையும் படியுங்கள்:  நீதிமன்றங்களில் 5 கோடி வழக்குகள் நிலுவை – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்!

இது குறித்து பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை.  இதற்கு உரிய மருத்துவ வசதி உள்ளது.  மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களில் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.  கை,  கால்களை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.  தேவையற்ற இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும்” என்றார்.

மேலும்,  “இவை அனைத்தும் நோய்கள் பரவாமல் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய காரணிகள். திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பொறுத்த வரை காய்ச்சலுக்கான தனி வார்டுகள் உள்ளன. தற்போது எச்1என்1 வைரஸ் பாதித்த நோயாளிகள் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.