ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக சுவாமிநாதன் ஜானகிராமன் நியமனம்!

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக சுவாமிநாதன் ஜானகிராமன் மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். ரிசர்வ் வங்கியின் தற்போது துணை ஆளுநராக பதவி வகிக்கும் மகேஷ் குமார் ஜெயினின் பதவிக்காலம் ஜூன் 22-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.…

ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக சுவாமிநாதன் ஜானகிராமன் மத்திய அரசால் நியமிக்கப்பட்டார்.

ரிசர்வ் வங்கியின் தற்போது துணை ஆளுநராக பதவி வகிக்கும் மகேஷ் குமார் ஜெயினின் பதவிக்காலம் ஜூன் 22-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே அவருக்கு பதிலாக ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அமைச்சரவை செயலாளர் தலைமையிலான குழு கடந்த ஜூன் 1-ம் தேதி நேர்காணல் செய்தது.

ரிசர்வ் வங்கி சட்டம் 1934-இன் படி, மத்திய வங்கிக்கு நான்கு துணை ஆளுநர்கள் இருக்க வேண்டும். எனவே ஏற்கனவே துணை ஆளுநராக இருந்த மகேஷ் குமார் ஜெயினின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அவருக்கு பதிலாக சுவாமிநாதன் ஜானகிராமன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது மைக்கேல் தேபப்ரதா பத்ரா, ராஜேஷ்வர் ராவ் மற்றும் டி.ரபி சங்கர் உடன் நான்காவது நபராக சுவாமிநாதன் இணைந்துள்ளார்.

சுவாமிநாதன் டிசம்பர் 1988 இல் பாரத ஸ்டேட் வங்கியில் மேலாளராகப் பணிபுரியத் தொடங்கினார். அதன்பிறகு, கிளை மேலாளர், தலைமை மேலாளர், AGM, VP & தலைமை வர்த்தக நிதி, துணைப் பொது மேலாளர் உள்ளிட்ட பல பதவிகளை அவர் வகித்தார். இவர் யெஸ் வங்கி, ஜியோ பேமெண்ட்ஸ் வங்கி மற்றும் என்பிசிஐ மற்றும் பேங்க் ஆஃப் பூட்டான், எஸ்பிஐ ஜேவி ஆகிய நிறுவனங்களின் எஸ்பிஐயின் நியமன இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.