தமிழகம் செய்திகள்

சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றத்தை திறந்து வைத்த காவல்துறை துணை கண்காணிப்பாளர்

சீர்காழி காவல்துறை சார்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்த போது நூலகத்துடன் கூடிய சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றத்திற்கு விளையாட்டு உபகரண பொருட்கள் வழங்கினர்

மாணவர்களை தவறான பழக்கங்களிலிருந்து மீட்டெடுக்கும் வகையில், மயிலாடுதுறை
மாவட்டம் சீர்காழி அடுத்த சட்டநாதபுரம் ஊராட்சியில் சீர்காழி காவல்துறை
சார்பாக, சிறுவர் மற்றும் சிறுமியர்கள் மன்றம் திறந்து வைக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். எஸ். நிஷா இதை திறந்து வைத்து, விளையாட்டு உபகரண பொருட்களை பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மாணவர்கள் தீய பழக்கங்களில் இருந்து மீட்டு எடுக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ள மன்றத்தில் பொது நூலகம், விளையாட்டு பொருட்களை பயன்படுத்தும் வகையில், சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் திறக்கப்பட்டுள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மயிலாடுதுறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார், சீர்காழி காவல்துறை துணை கண்காணிப்பாளர் லாமேக் காவல் ஆய்வாளர் சிவக்குமார் ஊராட்சி மன்ற தலைவர் தட்சிணாமூர்த்தி பொதுமக்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

-ஸ்ரீ மரகதம்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சொன்னதை செய்யும் ஆட்சி அதிமுக ஆட்சி : ஜான்பாண்டியன்!

EZHILARASAN D

“பொதுக்கழிப்பிடத்தை பயன்படுத்த கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை”

Web Editor

அலெக்சாவிடம் 19,000 முறை ஐ லவ் யூ சொல்லும் இந்தியர்கள்!

Jeba Arul Robinson