சிறைவாசிகளால் உருவாக்கப்பட்ட சுங்குடிச் சேலைகள் -விற்பனை விறுவிறுப்பு

மதுரை மத்திய சிறை ,சிறைவாசிகளால் உருவாக்கப்பட்ட மதுரை சுங்குடி சேலைகளுக்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பினால் ,சுங்கடி சேலை விற்பனை விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. மதுரை மத்திய சிறைச்சாலையில் 2000க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை…

மதுரை மத்திய சிறை ,சிறைவாசிகளால் உருவாக்கப்பட்ட மதுரை சுங்குடி சேலைகளுக்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பினால் ,சுங்கடி சேலை விற்பனை விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது.

மதுரை மத்திய சிறைச்சாலையில் 2000க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை
சிறைவாசிகள் இருந்துவருகின்றனர். இங்குள்ள சிறைத்தண்டனை சிறைவாசிகள் தங்களது தண்டனை காலங்களில் அவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். சிறைவாசிகளின் அனுபவம், அவர்களின் தொழில் திறமைகளை வெளிப்படுத்தி பல்வேறு பொருட்களை தயாரித்து வருகின்றனர்.

அதனை விற்பனை செய்வதற்காக மதுரை மத்திய சிறையில், சிறை
அங்காடி தொடங்கப்பட்டு அதன் மூலம் சிறைவாசிகளால் உருவாக்கப்படும் பொருட்கள்
விற்பனை செய்யப்பட்டுவருகிறது. சிறை அங்காடியில் சட்டைகள், ஸ்டேஷனரி , நொறுக்குத் தின்பண்டங்கள், இனிப்பு வகைகள் உள்ளிட்டவைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவருகிறது

இதேபோன்று காய்கறிகள்,பழங்கள் போன்றவையும் இயற்கையான முறையில் விவசாயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மதுரை மத்திய சிறையில் உள்ள சிறைவாசிகளால் உருவாக்கப்படும் சுங்குடி சேலை விற்பனையானது விறுவிறுப்படைந்துள்ளது.

சிறைவாசிகளால் உருவாக்கப்படக்கூடிய பல்வேறு டிசைன்களில் உருவாக்கப்படும்
சுங்குடி சேலைகளுக்குப் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக ஏராளமான பெண்கள் மற்றும் பெண்கள் நல அமைப்பினரும் சிறை
அங்காடிக்கு சென்று சுங்குடி சேலைகளை ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

மதுரையின் பெருமைகளில் ஒன்றான சுங்குடி சேலையை வாங்கி அணிவதோடு இதுபோன்ற சிறை அங்காடிகளில் வாங்கும் போது சிறைவாசிகளுடைய வாழ்வாதாரத்துக்கு உதவிடும் வகையில் இது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவதாகவும் பெண்கள் நல அமைப்பினர் தெரிவிக்கின்றனர். மதுரை மத்திய சிறை அங்காடியில் சுங்குடி சேலை விற்பனை அதிகரித்து வரக்கூடிய நிலையில் சுங்குடி சேலை தயாரிப்பை ஊக்குவிப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மதுரை சிறைத்துறை சரக டிஐஜி பழனி தெரிவித்துள்ளார்.

-ரெ.வீரம்மாதேவி


சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.