முக்கியச் செய்திகள் தமிழகம்

இளைஞர் மரணத்தில் சந்தேகம்; உறவினர்கள் சாலை மறியல்

கும்பகோணம் அருகே இளைஞர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, சாலையின் நடுவே உடலை வைத்து உறவினர்கள், மறியலில் ஈடுப்பட்டனர்.

தஞ்சை மாவட்டம் மணப்படையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிற்றுந்து ஓட்டுனரான ஹரிஹரன். கடந்த ஜனவரி மாதம் 8-ஆம் தேதி ஹரிஹரனுக்கும் லாரி ஓட்டுநர் பன்னீர் செல்வம் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், ஹரிஹரன் தனது ஆதரவாளர்களுடன சேர்ந்து பன்னீர்செல்வத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால், ஹரிஹரன் கைது செய்யப்பட்டுள்ளார். பின் ஜாமினில் வெளியே வந்ததில் இருந்து ஹரிஹரன் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின், மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கும் சிகிச்சை பலனின்றி நேற்று ஹரிஹரன் உயிரிழந்தார். ஹரிஹரன் மரணத்திற்கு சுவாமிமலை காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 4 பேர் காரணம் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் ஹரிஹரன் உறவினர்கள் கும்பகோணம் – தஞ்சாவூர் சாலையில் சடலைத்தை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அண்மைச் செய்தி: ‘சொத்து வரி அதிகரிப்பை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்’ – சசிகலா கோரிக்கை

இதையடுத்து போலீசார், உரிய விசாரணை நடத்துவதாக உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து ஹரிஹரன் உடல் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Advertisement:
SHARE

Related posts

தடுப்பூசி போட்டுக்கொள்ள இரவு முதலே நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பு!

Gayathri Venkatesan

பாதுகாப்புடன் தொடங்கிய மேற்கு வங்க 5-ம் கட்ட வாக்குப்பதிவு!

எல்.ரேணுகாதேவி

ஐக்கிய அரபு நட்டில் விண்வெளி ஆராய்ச்சிப் பயிற்சிக்காக தேர்வான முதல் பெண்!

Gayathri Venkatesan