முக்கியச் செய்திகள் இந்தியா

டெல்லியில் திறக்கப்பட்டுள்ள அண்ணா – கலைஞர் அறிவாலயத்தின் சிறப்பம்சங்கள் என்ன?

டெல்லியில் திறக்கப்பட்டுள்ள திமுக அலுவலகத்தின் சிறப்பம்சங்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

பாஜக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் தலைமை அலுவலகங்களும், டெல்லி மாவட்ட நீதிமன்ற வளாகங்களும் அமைந்திருக்கக் கூடிய தீனதயாள் உபாத்தியாயா மார்க் பகுதியில் கம்பீரமாய் கட்டி எழுப்பப்பட்டுள்ளது திமுக வின் அண்ணா – கலைஞர் அறிவாலயம்.

11 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்திற்கு வெளியே 45 அடி உயர கொடிக்கம்பத்தில் கறுப்பு- சிவப்பை தாங்கிய கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. அலுவலக நுழைவுவாயிலின் இடதுபுறத்தில் மார்பளவு அண்ணா சிலையும், வலதுபுறத்தில் அதே அளவுள்ள கருணாநிதி சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

அலுவலகத்தின் உள்ளே சென்றவுடன் “முரசொலி மாறன் அரங்கம்” என பெயரிடப்பட்டுள்ள அரங்கத்தில் அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோரின் புகைப்படங்களும், கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புகைப்படத் தொகுப்பும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நவீன லிஃப்ட் வசதி கொண்ட அலுவலகத்தின் முதல் தளத்தில் கட்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு அறைகளும், ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவதற்கு 11 பேர் அமரும் வகையில் சிறிய அளவிலான அரங்கமும் உள்ளன. இந்த தளம் முழுவதும் வண்ணமயமான விளக்குகளும், ஓவியங்களும் மிளிர்கின்றன.

இரண்டாவது தளத்தில் திமுகவின் ஒட்டு மொத்த வேலைகளையும் மேற்கொள்வதற்காக அலுவலக அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறையிலும் தனித்தனி தொலைபேசி வசதி, கணினி வசதி, கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அண்மைச் செய்தி: ‘கும்பகோணம் அருகே இளைஞர் மரணத்தில் சந்தேகம்; உறவினர்கள் சாலை மறியல்’

மூன்றாவது தளத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தங்குவதற்காக சூட் அறை ஒன்றும், அமைச்சர்கள் அல்லது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தங்குவதற்காக இரண்டு தனித்தனி அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

டெல்லியில் கடுமையான வெயில், கடுமையான குளிர் நிலவும் என்பதால் அதிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் திமுக அலுவலகம் கட்டப்பட்டுள்ளதாக கட்டிட பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Advertisement:
SHARE

Related posts

முதல்வராக பதவியேற்கவுள்ளார் பினராயி விஜயன்!

குரூப் 2, 2ஏ தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு

Saravana Kumar

நீட் தேர்வு தேதி அறிவிப்பு

Janani