தெலங்கானா டிஜிபி இடைநீக்கம் ரத்து – தேர்தல் ஆணையம்!

தெலங்கானா காவல் துறை தலைமை இயக்குநர் அஞ்ஜனி குமாரை பணியிடைநீக்கம் செய்த உத்தரவை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றது. தெலங்கானா பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை…

தெலங்கானா காவல் துறை தலைமை இயக்குநர் அஞ்ஜனி குமாரை பணியிடைநீக்கம் செய்த உத்தரவை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றது.

தெலங்கானா பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தியது.  வாக்கு எண்ணிக்கை நிறைவடைவதற்கு முன்னதாகவே, தெலங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியை மாநில காவல் துறை இயக்குநர் அஞ்ஜனி குமார், காவல் துறை அதிகாரிகள் சஞ்சய் ஜெயின்,  மகேஷ் பாகவத் ஆகியோர் அவரது இல்லத்தில் நண்பகலில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்:  ‘ஸ்டார்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது..!

இதையடுத்து,  அன்றைய தினமே தேர்தல் விதிமுறையை மீறியதற்காக அஞ்ஜனி குமாரை இடைநீக்கம் செய்தும்,  மற்ற 2 அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.  இதனைத் தொடர்ந்து, தெலங்கானா மாநில காவல்துறை இயக்குநராக ரவி குப்தா நியமனம் செய்யப்பட்டார்.

தேர்தல் நடத்தை விதிமீறல் சம்பந்தமாக அஞ்ஜனி குமாரின் விளக்கத்தை ஏற்ற தேர்தல் ஆணையம்,  அவரின் இடைநீக்க உத்தரவை ரத்து செய்துள்ளது.
இந்த நிலையில், அஞ்ஜனி குமாருக்கு விரைவில் முக்கிய பொறுப்பு அளித்து ரேவந்த் ரெட்டியின் அரசு உத்தரவு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.