முக்கியச் செய்திகள் இந்தியா

சிறையில் ஊட்டச்சத்து உணவு கேட்ட மல்யுத்த வீரர் சுஷில் குமார்!

சக வீரரைக் கொலை செய்த குற்றத்திற்காகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மல்யுத்த வீரர் சுஷில் குமார், ஊட்டச்சத்தான உணவு வழங்க வேண்டும் என முன்வைத்த கோரிக்கையை டெல்லி நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

ஒலிம்பிக் போட்டிகளில் 2 முறை பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார். கடந்த மே மாதம் இவருக்கும், சக மல்யுத்த வீரரான சாகர் தான்கட்டிற்கும் இடையே டெல்லியில் மைதானத்தில் கைகலப்பு ஏற்பட்டது. இதில் சாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக வழக்கு பதிந்த போலீசார், தலைமறைவான சுஷில் குமாரையும், அவருடைய நண்பர்களையும் தேடி வந்தனர். பின்னர் டெல்லி போலீசார் தனிப்படை அமைத்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தற்போது டெல்லி மாண்டொலி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுஷில் குமார் தனக்கு சிறையில் ஊட்டச்சத்தான சிறப்பு உணவுகள், உடற்பயிற்சி செய்ய கருவிகள் மற்றும் ஊட்டச்சத்து மாத்திரைகள் ஆகியவை வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த டெல்லி நீதிமன்ற நீதிபதி சத்வீர் சிங் லம்பா, அத்தியாவசிய தேவை இல்லை என்பதால், சுஷில் குமாரின் விருப்பம் சார்ந்த கோரிக்கை ஏற்க இயலாது என்றும், சட்டம் அனைவருக்கும் சமமானதே என்றும் கூறி சுஷில் குமாரின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார்.

Advertisement:

Related posts

நாடாளுமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் தனித்து போட்டி!

எல்.ரேணுகாதேவி

மேற்கு வங்கத்தில் 34.7% வாக்குப்பதிவு!

Gayathri Venkatesan

நடிகர் விஜய் சேதுபதி நடித்த மாமனிதன் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

Jayapriya