முக்கியச் செய்திகள் தமிழகம்

10-ம் வகுப்பு மாணவர்கள் ‘தேர்ச்சி’ என குறிப்பிட்டு மதிப்பெண் சான்றிதழ்!

தமிழ்நாட்டில் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, தேர்ச்சி என்று மட்டுமே குறிப்பிட்டு, மதிப்பெண் சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவல் தீவிரமடைந்ததன் காரணமாக தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்நிலையில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு, பாட வாரியாக மதிப்பெண்கள் வழங்காமல் “தேர்ச்சி” என்று மட்டும் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க அரசு தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான கோப்புகளில் அரசின் ஒப்புதல் பெற, தேர்வுகள் இயக்ககம் அனுப்பியுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Advertisement:

Related posts

நாளை திமுக மா.செக்கள் ஆலோசனைக் கூட்டம்: துரைமுருகன்

Karthick

ஊரடங்கை முன்னிட்டு இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள்: அமைச்சர் ராஜகண்ணப்பன்

Karthick

மீனவர்களுக்கு எச்சரிக்கை:வானிலை மையம்!