முக்கியச் செய்திகள் குற்றம்

திருடப்பட்ட கவரிங் செயினை தங்கம் என்று போலீசில் புகாரளித்த பெண்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. இவர் சம்பவத்தன்று தெருவில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த இளைஞர் ஒருவர் கிருஷ்ணவேணி கழுத்திலிருந்து செயினை பறித்துச்சென்றிருக்கிறார்.

இதனையடுத்து கிருஷ்ணவேனி தன்னுடைய மூன்று பவுன் தங்க செயினை மர்ம நபர் ஒருவர் கொள்ளையடித்துச் சென்றதாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல் துணை கண்காணிப்பாளர் நமச்சிவாயம் உத்தரவின்பேரில் சார்பு ஆய்வாளர் கருத்தப்பாண்டி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு நகையை பறித்துச் சென்ற நபரை போலீசார் தேடி வந்தனர்.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து கிருஷ்ணவேனியின் நகையை திருடிய அலெக்ஸ் பிரேம் என்பவரை கைது செய்த போலீசார், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், தான் நகையை பறித்தது உண்மைதான் என்றும், ஆனால் அது கவரிங் நகை என்பதால் அங்கேயே தூக்கி எரிந்து விட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

நகை வீசப்பட்ட பகுதிக்கு சென்ற போலீசார் பெண்ணின் கழுத்தில் இருந்து பறிக்கப்பட்ட நகையை கண்டெடுத்தனர். அதனை சோதனை செய்து பார்த்தபோது கவரிங் நகை என்பது உறுதியானது. இதனை அடுத்து கவரிங் நகையை தங்க நகை என்று கூறி போலீசாரை ஏமாற்றிய கிருஷ்ணவேணியை அழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

தங்கநகையாக இருந்தாலும் கவரிங் நகையாக இருந்தாலும் திருடும் எண்ணத்தில் பெண்ணிடமிருந்து நகையை பறித்ததால் சம்பந்தப்பட்ட நபர் தண்டிக்கப்பட வேண்டும் என்று கருதிய போலீசார், அந்த இளைஞரை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

செயினை திருடியை அலெக்ஸ் பிரேமை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இளைஞர், அருப்புக்கோட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement:

Related posts

கொரோனாவிற்கு ஒரே நாளில் 4,329 பேர் பலி!

Vandhana

விவசாயிகள் உடனான 10ம் கட்ட பேச்சுவார்த்தையை ஒத்திவைத்தது மத்திய அரசு!

Saravana

இந்திய மற்றும் திராவிட கட்சிகளை நாம் தமிழர் கட்சி தான் வழி நடத்துகிறது: சீமான்

Niruban Chakkaaravarthi