சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா நாளை (ஜூலை23) தனது 46வது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில், தற்போது தனது 40வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். முன்னதாக நேற்றைய தினம் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படத்திற்கு பெயர் குறிப்பிடாமல் ‘சூர்யா 40’ எனும் குறிப்பிட்டு போஸ்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இணையத்தில் வெளியிட்டது. இதனையடுத்து, இன்று ‘எதற்கும் துணிந்தவன்’ என்கிற பெயருடன் சன் பிக்சர்ஸ் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது.
https://twitter.com/Suriya_offl/status/1418186676694786055
இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவுனம் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்ற நிலையில், இதற்கு அடுத்தபடியாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.









