முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம்

வாக்கிங் சென்ற நடிகையிடம் செயின் பறிப்பு

வாக்கிங் சென்ற நடிகையிடம் செயினை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல மராத்தி நடிகை சவிதா மல்பேகர். இவர் இந்தி படங்களில் நடித்துள்ளார். மும்பை தாதர் பகுதியில் வசிக்கும் இவர், கடந்த திங்கட்கிழமை அங்குள்ள சிவாஜி பார்க்கில், வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது வந்த மர்ம நபர் ஒருவர் அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு பைக்கில் பறந்தார். போலீசில் புகார் செய்ததை அடுத்து அவர்கள் திருடனை கைது செய்துள்ளனர்.

இதுபற்றி நடிகை சவிதா மல்பேகர் கூறியதாவது:

வழக்கம் போ,ல சிவாஜி பார்க்கில் வாக்கிங் சென்று கொண்டிருந்தேன். எப்போதும் அங்கு கூட்டமாக இருக்கும். திங்கட்கிழமை மழை பெய்ததால், அதிக கூட்டம் இல்லை. நான் வாக்கிங்கை முடித்துவிட்டு பெஞ்சில் அமர்ந்து போனில் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் அருகில் வந்து, மணி என்ன என்று கேட்டார்.

வாட்ச் இல்லை என்றேன். மொபைலில் பார்த்து சொல்லுங்கள் என்றார். இப்போது பேசிக்கொண்டிருப் பதால், பார்க்க வாய்ப்பில்லை என்றேன். பிறகு சென்றுவிட்டார். நான் போனில் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். திடீரென என் பின்பக்கம் யாரோ தட்டுவது போல இருந்தது. நாயாக இருக்குமோ என்று நினைத்து திரும்பினேன். யாருமில்லை. திடீரென என் முன்னால் அந்த ஆள் நின்றான்.

நான் சுதாரிப்பதற்குள் கழுத்தில் கிடந்த செயினை பறித்துக்கொண்டு பைக்கில் பறந்துவிட்டான். நான் விரட்டிச் சென்றேன். முடியவில்லை. இதுபற்றி போலீசில் புகார் கொடுத்தேன். சிசிடிவி கேமராவை பின்பற்றி அந்த திருடனை போலீசார் பிடித்து விட்டார்கள். மும்பை போலீசுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement:

Related posts

18-45 வயதுள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த 3 ஆண்டுகள் ஆகும்

மாநிலங்களுக்கு நாளொன்றுக்கு 50 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படுகிறது: மத்திய அரசு

Gayathri Venkatesan

பேராசிரியர் காலிபணியிடங்களை இணையத்தில் பதிவேற்றுக: யுஜிசி