ரஜினி காந்த் மற்றும் கமல் ஹாசன் இணந்து நடிக்கும் புதிய படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 47 ஆண்டுகள் கழித்து ரஜினி – கமல் இருவரும் இணைந்து நடிப்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்ப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் இன்று வெளியாகியுள்ளது. அதன் படி படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் ரஜினி மற்றம் கமல் இணைந்து நடிக்கும் இப்படத்தின் புரோமோ வீடியோ நாளை மதியம் 12.07 மணிக்கு வெளியாகும் என்றும் இந்த புரோமோ வீடியோ நாளை திரையரங்குகளிலிலும் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான டிக்கெட் முன்பதிவும் தொடங்கியுள்ளது.
தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள மற்றொரு போஸ்டரில் படத்தின் இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் ஆகியோரை படக்குழு அறிவித்துள்ளது. அதன் படி இப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குவதாகவும் அனிரூத ரவிச்சந்திரன் இப்படத்திற்கு இசைமைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.









