முக்கியச் செய்திகள் தமிழகம்

கைத்தறி விழிப்புணர்வுக்கு நடிகர்களை வைத்து விளம்பரம்

அரசு ஊழியர்கள் கைத்தறி ஆடைகளை வாரத்தில் 2 நாட்கள் அணிய வேண்டும் என்ற முதலமைச்சரின் அறிவுறுத்தலையடுத்து கைத்தறி ஆடைகளின் விற்பனை உயர்ந்துள்ளதாக கைத்தறித்துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.

கைத்தறித்துறை மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி  சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும்போது, பல கூட்டுறவு சங்கங்கள் முறைகேடாக செயல்பட்டு வருவதாகவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.,

தருமபுரியில் 10ஆயிரம் ஏக்கர் அளவில் டெக்ஸ்டைல் பூங்கா அமைக்கப் பணிகள் நடைபெறுவதாகக் கூறிய அமைச்சர் காந்தி, கைத்தறித் துணிகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக திரைக் கலைஞர்களை வைத்து விளம்பரப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

துபாயில் நடைபெறக் கூடிய சர்வதேச டெக்ஸ்டைல் கண்காட்சியில் கைத்தறி துணிகளை காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் காந்தி கூறினார்.

Advertisement:
SHARE

Related posts

ஆதிச்சநல்லூரில் கிடைக்கும் முதுமக்கள் தாழிகள்

Halley karthi

தேர்தலைப் புறக்கணிக்கும் திருப்பூர் மக்கள்!

Gayathri Venkatesan

அசாம் சட்டப்பேரவை தேர்தல்: 3 கட்டங்களாக நடைபெறும்

Niruban Chakkaaravarthi