முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

கனமழை நீடிப்பதால் சென்னையின் முக்கிய நீர் தேக்கங்களில் உபரி நீர் திறப்பு

சென்னையில் கனமழை நீடிப்பதால் புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் நீர் தேக்கங்களில் வினாடிக்கு 100 கன அடி உபரி நீர் பாதுகாப்பு கருதி திறக்கப்பட்டது.

மாண்டாமஸ் புயல் காரணமாக தற்போது பெய்து வரும் கனமழையால் சென்னைக்குக் குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் புழல், பூண்டி, உள்ளிட்ட நீர் தேக்கங்களில் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 100 கன அடி முதல் கட்டமாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

செம்பரம்பாக்கம், புழல், பூண்டி உள்ளிட்ட நீர் தேக்கங்களில் திறக்கப்பட்ட உபரி நீரானது வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து தாழ்வான் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.மேலும், நீர்வரத்து அதிகரிப்பைப் பொறுத்துக் கூடுதலாக உபரிநீர் வெளியேற்றப்பட வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது புழல் நீர் தேக்கம் 21 . 20 அடியில் சுமார் 17 அடி எட்டி வேகமாக நிரம்பி வருகிறது. அத்துடன், பூண்டி நீர் தேக்கம் 35 அடியில் தற்போது 33 அடியை எட்டி வேகமாக நிரம்பி வருகிறது. மேலும், செம்பரம்பாக்கம் அதன் மொத்த அடி 24 அடியில் தற்போது 20. 38 அடி நெருங்கியுள்ளது.

பலத்த காற்று வீசுவது நின்ற நிலையிலும் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. ஒலிபெருக்கி மூலம் வருவாய்த் துறையினர், பாதுகாப்பாக இருக்கவும் வீட்டிலேயே தங்கவும் மீனவர்கள் படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்தவும் உபரிநீர் செல்லும் தாழ்வான பகுதிகளுக்குச் செல்லக்கூடாது எனவும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு

Janani

திருநங்கைகளுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு!

3500 உணவு வகைகள்…சதுரங்க வீரர்களை சந்தோஷப்படுத்த காத்திருக்கும் மெனுக்கள்…

Web Editor