இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று டெல்லி சென்றார். டெல்லி உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக முன்னாள் ஆளுநரும் தற்போதைய பஞ்சாப் ஆளுநருமான பன்வாரிலால் புரோகித்தின் பேத்தி பூஜா-சிவம் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதனையும் படியுங்கள்: மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் உடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு!
இன்று காலை டெல்லியில் உள்ள திமுக கட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கு முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, கருணாநிதி ஆகியோரின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார்.இதைத் தொடர்ந்து இன்று மதியம் 1.15 மணியளவில் மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் அமைச்சர் ஸ்ரீகிரிராஜ் சிங்கை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பஞ்சாயத்து ராஜ் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக மத்திய அமைச்சரிடம் விரிவாக பேசினார். இந்த சந்திப்பின் போது மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவள்ளுவர் சிலையை பரிசளித்தார்.
இதனையும் படியுங்கள்: ராஜபக்ச சகோதரர்கள் கமிஷன் கேட்டனர் – விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவைச் சேர்ந்த தயா மோகன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி
இதனைத் தொடர்ந்து இன்று மாலை 4.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். அமைச்சரான பிறகு உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை முதல் முஏஐயாக சந்தித்துள்ளதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
–யாழன்







