கொரோனா தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டுமென யாரிடமும் கூற முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியா முழுக்க கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி முழு வீச்சில் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 189 கோடியே 23 லட்சம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசி கட்டாயம், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வருவதற்கு தடை விதித்த பல்வேறு மாநில அரசின் அரசாணைகள் வெளியிட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், “அரசியல் சாசன பிரிவு 21இன் கீழ் எந்த ஒரு தனி நபரையும் தடுப்பு ஊசியை கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என கூற முடியாது, தடுப்பூசி போடப்படாதவர்கள் பொது இடங்களுக்கு வரக்கூடாது என்ற கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளனர்.
கொரோனா தடுப்பூசியினால் ஏற்படும் எதிர்மறை நிகழ்வுகளை வெளிப்படையாக தெரிவிக்குமாறும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.