முக்கியச் செய்திகள்

டாஸ் போடுவது மட்டுமல்ல: கேப்டன்ஸி குறித்து தல ஓப்பன் டாக்!

கேப்டன்ஸி என்பது டாஸ் போடுவதுடன் முடிந்துவிடாது என்று சிஎஸ்கே கேப்டன் தோனி கூறியுள்ளார்.

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தமுறை கேப்டன் பொறுப்பை ஜடேஜாவுக்கு வழங்கியிருந்தது. இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் தோனி கேப்டன்ஸி பொறுப்பை ஜடேஜாவுக்கு வழங்கியதாக தகவல் வெளியானது. ஆனால், ஜடேஜா தலைமையிலான அணி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. நடைபெற்ற முதல் 8 போட்டியில் 6இல் தோல்வியைத் தழுவியது. இது ரசிகர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னை சூப்பர் கிங்ஸின் ஆல் ரவுண்டராக கலக்கிக் கொண்டிருந்த ஜடேஜா, கேப்டன்ஸி பிரெஸர் காரணமாக தனது ஆட்டத்தில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் திணறினார். இந்நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக மீண்டும் தோனியே நியமிக்கப்பட்டிருந்தார். தனது ஆட்டத்தில் ஜடேஜா கவனம் செலுத்த விரும்புவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

நேற்று நடைபெற்ற ஐதராபாத் அணிக்கு எதிராக நடப்பு சீசனில் முதல் போட்டியில் கேப்டனாக தோனி களமிறங்கினார். இப்போட்டியில், தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், கேப்டன்ஸி குறித்து தோனி பேசுகையில், கடந்த சீசனின்போதே கேப்டன்ஸி வாய்ப்பு கொடுக்கப்படும் என்பது ஜடேஜாவுக்கு தெரியும். அதற்கு தயாராவதற்கு அவருக்குப் போதிய நேரம் இருந்தது. இந்த மாற்றம் படிப்படியாக நிகழ வேண்டும் என நினைத்தோம். முதல் இரண்டு போட்டிகளில் என்னிடமிருந்து ஜடேஜாவுக்கு நிறைய விஷயங்கள் சென்றன. அதன் பிறகு அவரே தன்னிச்சையாக முடிவெடுத்து அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்துவிட்டேன்.

கேப்டனாக இருப்பவருக்கு ஊட்டிவிடுவது பயனளிக்காது. டாஸ் போடுவதற்கு மட்டும் கேப்டன் என்ற எண்ணம் வந்துவிடக் கூடாது என்ற விஷயத்தில் நாங்கள் தெளிவாக இருந்தோம். களத்தில் கேப்டன் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியதிருக்கும். அதற்கான பொறுப்புகளை அவர் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். அணியின் அனைத்து விஷயங்களையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.  தனது சொந்த ஆட்டத்திலும் கவனம் செலுத்த வேண்டும். கேப்டன்ஸியால் ஜடேஜாவின் சொந்த ஆட்டம் பாதிக்கப்பட்டது. ஆல் ரவுண்டராக கலக்கும் ஜடேஜா அணிக்குத் தேவை. கேப்டன்ஸி இல்லை என்றால்தான் அவர் கிடைப்பார் என்றால் அதுதான் அணிக்கும் தேவை என்றார்.

முன்னதாக டாஸ் போடும்போது, நீங்கள் என்னை அடுத்த ஆண்டும் நிச்சயமாக மஞ்சள் நிற ஜெர்ஸியில்தான் பார்ப்பீர்கள். அது இதே பிளேயிங் லெவல் ஜெர்ஸியா, இல்லை வேறுவிதமான மஞ்சள் ஜெர்ஸியா என்பது எதிர்காலத்தில்தான் தெரியும் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வழக்கறிஞர் துறையின் முக்கியத்துவம் எங்களுக்கு தெரியும்; அமைச்சர் ரகுபதி

G SaravanaKumar

நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500 வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்- பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

Web Editor

என்னை கொலை செய்ய முயற்சி: அமமுகவினர் மீது கடம்பூர் ராஜு குற்றச்சாட்டு!

EZHILARASAN D