மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள்; தலைமை நீதிபதி சந்திரசூட்டின் கருத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை அனைத்து மாநில மொழிகளிலும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற தலைமை நீதிபதியின் யோசனையை முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், உச்சநீதிமன்ற…

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை அனைத்து மாநில மொழிகளிலும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற தலைமை நீதிபதியின் யோசனையை முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். மேலும் இதற்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் ஆலோசனை கூறியிருந்தார்.

https://twitter.com/mkstalin/status/1617378168222150656?s=46&t=AJcDFeCjU1DYVFhgfmcftw

இவ்வாறு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பேசிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு பாராட்டு தெரிவித்தார். மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை வெளியிடுவதன் மூலம், சாமானிய மக்கள் மற்றும் இளைஞர்கள், பயனடைவர் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் ட்விட்டர் பதிவை, ரீ-ட்வீட் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து இந்திய மொழிகளிலும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை வெளியிட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் யோசனையை முழுமனதுடன் வரவேற்பதாக கூறியுள்ளார். மேலும், உயர்நீதிமன்றங்களில் மாநில மொழிகளின் பயன்பாட்டை அனுமதிக்க வேண்டும் என்ற தங்களின் நீண்ட நாள் கோரிக்கை, சாமானிய மக்களுக்கு நீதியை நெருக்கமாக கொண்டு வரும் என்றும் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.