ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக முடிவெடுக்க தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அக்கட்சி முழு அதிகாரம் வழங்கியுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், கட்சியின் மாவட்ட செயலாளர் கூட்டம், பொருளாளர் பிரேமலதா தலைமையில் நடைபெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு, பலத்தை நிரூபிக்க வேண்டும் என தேமுதிகவினர் விரும்புகின்றனர். இந்நிலையில் தேர்தல் நிலைப்பாடு குறித்து, கட்சியின் மாநில நிர்வாகிகள், மற்றும் மாவட்ட செயலர்கள் உடன் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கிப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக முடிவெடுக்க தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நெய்வேலி அனல் மின் நிலையம் மற்றும் சேலம் இரும்பு உருக்கு ஆலையை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என மற்றொரு தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேலும் நடந்து முடிந்த தேமுதிக உட்கட்சி தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தும் வெற்றிபெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.