முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

தடுப்பூசி போடுவது பற்றி கிரிக்கெட் வீரர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் – பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் வீரர்கள், மே 1 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பரவி வரும் கொரோனா தொற்றைத் தடுக்க தடுப்பூசி போடும் பணிகள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. மே 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்றுள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு தடுப்பூசி போடுவது பற்றிய கேள்விகள் எழுந்தன. இதுபற்றி ஏற்கனவே பேசிய இந்திய கிரிக்கெட் வாரிய துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, கொரோனா அச்சத்தை வைத்துக்கொண்டு வீரர்கள் கிரிக்கெட் விளையாட முடியாது என்றும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும் இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகத்துடன் இந்திய கிரிக்கெட் வாரியம் பேசி முடிவெடுக்கும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், சனிக்கிழமை முதல் வீரர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றும் தடுப்பூசி போடுவது குறித்து வீரர்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ள நிலையில் அவர்களுக்கு இங்கு தடுப்பூசி போடப்பட வாய்ப்பில்லை என்றும் இந்திய வீரர்களுக்கு மட்டுமே இங்கு தடுப்பூசிப் போடப்படும் என்றும் இந்திய கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 93.51 லட்சத்தை கடந்தது!

Nandhakumar

மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு – 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Web Editor

இசைக் குழு நடத்தி பல பெண்களை ஏமாற்றிய பாடகர்!

Jeba Arul Robinson