உச்ச நீதிமன்றத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 90 ஊழியர்களில் 40 பேர் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் கொரோனா பரவல் காரணமாக நேற்று மட்டும் 1,68,912 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 904 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை 1,35,27,717 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்துவரும் உச்ச நீதிமன்றத்தில் ஊழியர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் பணிபுரியும் 90 ஊழியர்களில் 44 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன்காரணமாக உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கையில் எந்த பாதிப்பு ஏற்படவில்லை. நீதிமன்ற அலுவலக அறைகள் மற்றும் முழு நீதிமன்ற வளாகம் அனைத்தும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் உள்ள 16 நீதிமன்றங்கள் செயல்பட்டுவருகிறது. தற்போது வழக்கு கோப்புகள் பெரும்பாலும் கணினிமயமாக்கப்பட்டுள்ள நிலையில் அலுவலக பணிகள் எளிதாக்கப்பட்டுள்ளது.