டி 20 உலக கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்று நடைபெற்ற் வருகிறது. அகமாதாபத்தில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணியில் அதிரடி ஆட்டக்காரரான டேவிட் மில்லர் 35 பந்துகளில் 63 ரன்கள் விளசினார். அதே போல மற்ற ஆட்டக்காரர்களான டெவால்ட் பிரெவிஸ் 45 ரன்களும் , டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 44 ரனகளும் குவித்தனர். இதனால் அணியின் ஸ்கோர் கணிசமான அளவு உயர்ந்தது. இந்தியா அணி சார்பில் ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி இந்தியா விளையாட்டி வருகிறது.







