இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இரண்டு ஆட்டங்களில் வென்றது. மூன்றாவது ஆட்டத்தில் இந்தியா வென்றது.
இந்நிலையில், அயர்லாந்து சென்று இரண்டு 20 ஓவர் போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த அணிக்கு கேப்டனாக ஹார்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், அணியில் ராகுல் திரிபாதிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய ராகுல் திரிபாதி, முதல் முறையாக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய அவர் மொத்தம் 413 ரன்கள் குவித்தார். சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.
இந்தத் தொடரில் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராகுல் திரிபாதி கூறுகையில், “இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டதன் மூலம் எனது கனவு நனவானது. எனக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய வாய்ப்பு இதுவாகும். இதனால், மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளேன். தேர்வானவர்கள் மற்றும் என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசாக இதை பார்க்கிறேன். எனக்கு ஆட்டத்திலும் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்துவேன்” என்று ராகுல் திரிபாதி தெரிவித்தார்.
-மணிகண்டன்