முக்கியச் செய்திகள் தமிழகம்

நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வலியுறுத்தி ஜூன் 13 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கம் அறிவித்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் அரசுடன் நடைபெற்ற இறுதி பேச்சுவார்த்தையின் போது ஒரு வார காலத்திற்குள் நியாய விலைக் கடை பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என கூட்டுறவுத் துறை உத்தரவாதம் அளித்தது. இதனால் போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கம் அறிவித்தது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக்கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 22.02.2021 முதல் ஊதியம் மறுநிர்ணயம் செய்யப்பட்டு 14% அகவிலைப்படி பெற அனுமதிக்கப்பட்டிருந்தது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

2021 ஜனவரி 1 முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 14% அகவிலைப்படி உயர்வினை வழங்குமாறு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் விடுத்த கோரிக்கையினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கனிவுடன் பரிசீலித்ததாக குறிப்பிட்ட முதலமைச்சர், “ 1.01.2022 முதல் நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 28% அகவிலைப்படி பெறவும், அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது உயர்த்தி வழங்கப்படும் அகவிலைப்படி வீதங்களை பெறவும் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “இந்த அகவிலைப்படி உயர்வினால் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள நியாயவிலைக்கடைகளில் பணிபுரியும் 19,658 விற்பனையாளர்கள் மற்றும் 2,852 கட்டுநர்கள், என மொத்தம் 22,510 பணியாளர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டொன்றுக்கு 73 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்” என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கொரோனா தடுப்பூசிக்கு டெல்லி அரசு தயாராக உள்ளது; முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால் தகவல்!

Saravana

ஆகஸ்ட் 14- பிரிவினை கொடுந்துயர நினைவு தினம்

Halley Karthik

கூகுள் பே-வில் இப்போது ஹிங்லிஸ்

Arivazhagan Chinnasamy