நீலகிரியில் பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி மலர்கள் – படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்!

நீலகிரி, கர்நாடக எல்லைப்பகுதிகளில் உள்ள மலை கிராமங்களில் பயிரிடப்பட்ட சூரியகாந்தி மலர்கள், லட்சக்கணக்கில் பூத்துக் குலுங்கும் காட்சியை சுற்றுலா பயணிகள் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டம் எல்லையில்…

நீலகிரி, கர்நாடக எல்லைப்பகுதிகளில் உள்ள மலை கிராமங்களில் பயிரிடப்பட்ட சூரியகாந்தி மலர்கள், லட்சக்கணக்கில் பூத்துக் குலுங்கும் காட்சியை சுற்றுலா பயணிகள் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர்.

இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டம் எல்லையில் அங்களா, குண்டல்பேட் ஆகிய பகுதிகளில் உள்ள மலை கிராமங்களில் விவசாயிகள் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் சூரியகாந்தி மலர் செடிகளை பயிர் செய்துள்ளனர்.

இந்த மலர் செடிகளில் தற்போது சூரியகாந்தி மலர்கள் லட்சக்கணக்கில் பூத்துக் குலுங்குகிறது. இந்த சூரியகாந்தி மலர்களுக்காக பறவைகள், தேனீக்கள் படையெடுத்து வருவது போல் அங்களா வழியாக நீலகிரிக்கு சுற்றுலா வரக்கூடிய சுற்றுலா பயணிகளும் தங்களது வாகனங்களை நிறுத்தி சூரியகாந்தி மலர்களுடன் செல்பி எடுத்தும், புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்து செல்கின்றனர்.

சுமார் நூறு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட சூரியகாந்தி மலர்கள் ஒட்டுமொத்தமாக பூத்துள்ளது. அப்பகுதி முழுவதும் மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்கிறது.

– சே.அறிவுச்செல்வன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.