அரசின் பொங்கல் பரிசுக்காக கொள்முதல் செய்யப்பட்ட செங்கரும்புகள்- மேலூரிலிருந்து ஏற்றுமதி

மேலூரில் பொங்கலை முன்னிட்டு அறுவடையாகும் செங்கரும்புகள்  அரசின் பொங்கல் பரிசுக்காக லாரிகளில் கொள்முதல் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டன. பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.1,000 ரொக்கத்துடன்…

மேலூரில் பொங்கலை முன்னிட்டு அறுவடையாகும் செங்கரும்புகள்  அரசின் பொங்கல் பரிசுக்காக லாரிகளில் கொள்முதல் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டன.

பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பாக ரூ.1,000 ரொக்கத்துடன் முழு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. பொங்கல் பரிசு வழங்கல் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது.

பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன்கள் ஏற்கனவே விநியோகம் செய்யப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் நாளை முதல்  பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் தொடங்கப்படவுள்ளது. சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா். இதைத் தொடா்ந்து, பிற மாவட்டங்களிலும் பொங்கல் பரிசு வழங்கப்படும். வரும் ஜனவரி 13ம் தேதி வரை பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே மேலூரில் பொங்கலை முன்னிட்டு அறுவடையாகும் செங்கரும்புகள்  அரசின் பொங்கல் பரிசுக்காக லாரிகளில் கொள்முதல் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டன.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியானது முல்லைபெரியாறு பாசனத்தின் கடைமடை பகுதி விவசாயம் ஆகும். இங்கு நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் பிரதான பயிர்வகைகளாக உள்ள சூழலில், மேலூர் வட்டாரத்தில் பொங்கலை முன்னிட்டு சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் செங்கரும்புகள் பயிரிடப்பட்டன.

இந்த சூழலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மேலூர் வட்டாரத்தில் உள்ள
நாவினிபட்டி, கீழையூர்,சருகுவலையபட்டி, எட்டிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில்
கரும்புகள் அறுவடை தீவிரமடைந்து வருகின்றது. நாளை முதல் நியாய விலைகடைகளில்
அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ள நிலையில் கரும்பு வழங்க
அறுவடை செய்து லாரிகளில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.

மேலூர் பகுதி செங்கரும்புக்கென தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, குஜராத்,
மகாராஸ்டிரா உள்ளிட்ட மாநில வியாபாரிகள் மத்தியில் இக்கரும்புவின் சுவை
காரணமாக நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடதக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.