முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை ஆகிய தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.10.01.2023 முதல் 12.01.2023 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திசைகாற்றின் வேக மாறுபாடு காரணமாக நேற்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆக்சிஜன் உற்பத்திசெய்ய நடவடிக்கை: முதல்வர்!

படிப்பை தொடர மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்; மாணவர்கள் கோரிக்கை

G SaravanaKumar

கொரோனா நோய் தொற்றை ஆராய சென்னையில் பகுப்பாய்வு கூடம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்