சேலம் தினசரி காய்கறிச் சந்தையில் தக்காளி விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தலைவாசல், சிறுவாச்சூர், கருமந்துறை, உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்துள்ளனர். வடகிழக்குப் பருவமழை காரணமாக தக்காளிச் செடிகளில் பூக்கள் உதிர்ந்து விளைச்சல் பாதிக்கப்பட்டதால், தலைவாசல் காய்கறி சந்தையில் தக்காளி வரத்து குறைந்து காணப்படுகிறது.
இதனால், கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது 80 ரூபாய்க்கு விற்கப்படுவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இதே நிலை நீடித்தால் தக்காளி கிலோ 100 ரூபாயை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.







