முக்கியச் செய்திகள் பக்தி

கந்தசஷ்டி திருவிழா; இன்றுடன் நிறைவு பெற்றது

கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளையொட்டி முருகனின் அறுபடை வீடுகளில் திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றது.

சூரபத்மனை வதம் செய்த முருகனுக்கு தெய்வானையை மணம்முடித்து வைக்கும் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் முருகனின் மூன்றாம் படை வீடான பழனியில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

கந்த சஷ்டி விழாவின் நிறைவு நாளான இன்று மலைக்கோயிலில் சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், தொடர்ந்து திருமண விருந்தும் நடைபெற்றது. மேலும், இரவு 7 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோயிலில் முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானைக்கு திருக்கல்யாணமும், தங்கக்குதிரை வாகன உலாவும் நடைபெறவுள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம்படைவீடான பழனியில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து அசுரர்களை அழித்து போரில் வெற்றிபெற்ற சண்முகருக்கு தெய்வானையை மணமுடித்து வைக்கும் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. மலைக்கோவில் மேற்பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் அருள்மிகு சண்முகர்-வள்ளி,தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக அருள்மிகு சண்முகர்-வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
கந்தசஷ்டி திருவிழா இன்றுடன் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்ட கலந்துகொண்டனர். கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் கூட்டமின்றி திருக்கல்யாணம் நடைபெற்றது.

அதேபோல, மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் அமைந்துள்ள பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலில், கந்த சஷ்டி நிறைவு நாளையொட்டி முருகன், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது.

இன்று மாலை 4.30 மணிக்கு ஊஞ்சல் சேவையும், மஞ்சள் நீராட்டுதல் உற்சவத்துடனும் திருவிழா நிறைவுபெறுகிறது. கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக கந்த சஷ்டி விழா பக்தர்கள் அனுமதியின்றி நடைபெற்றது.

Advertisement:
SHARE

Related posts

நடிகை ஜெமினி ராஜேஸ்வரி காலமானார்

Vandhana

மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

Halley karthi

கின்னிமங்கலம் ஏகநாதர் கோயிலில் மத்திய, மாநில தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு

Jeba Arul Robinson