முக்கியச் செய்திகள் தமிழகம் வணிகம்

விநாயகர் சதுர்த்தி: பூக்கள், பூஜை பொருட்களின் விலை திடீர் உயர்வு

விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த தினத்தை முன்னிட்டு பூக்கள் மற்றும் பூஜை
பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

விநாயக சதுர்த்தி நாளை கொண்டாடப்படுவதை ஒட்டியும் முகூர்த்த தினத்தை முன்னிட் டும் கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் பூக்கள், பழங்கள் மற்றும் பூஜைப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். எப்போதும் இல்லா அளவிற்கு பூஜை பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது.

அதன்படி அருகம் புல் ஒரு கட்டு 50 ரூபாய்க்கும், தென்னைத் தோரணம் கீற்று 20 ரூபாய்க் கும், மாவிலை ஒரு கட்டு 10 ரூபாய்க்கும், தாமரைப்பூ ஒன்று 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பூக்களின் விலையை பொறுத்தவரை, மல்லி ரூ. 1200 க்கும் ரோஜா வகைகள் 200 முதல் 300 ரூபாய்க்கும் சாமங்கி பூ ஒரு கிலோ ரூ 180-க்கும் முல்லைப் பூ, கிலோ ரூ 500-க்கும் விற் பனையாகிறது. பூக்கள் வரத்து தட்டுப்பாடு இல்லாமல் வருவதால் மிகப்பெரிய அளவில் விலை உயரவில்லை என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்

Advertisement:
SHARE

Related posts

4 மாதங்களில் பதவி விலகிய உத்தரகாண்ட் முதலமைச்சர் தீரத் சிங் ராவத்

Ezhilarasan

இமாச்சலப் பிரதேச நிலச்சரிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு

Gayathri Venkatesan

கொரோனா நோயாளியைக் கொலை செய்த அரசு மருத்துவமனை பெண் ஊழியர்!