மதுரை உசிலம்பட்டி அருகே மது அருந்த பணம் தராத தாயை மிதித்துக் கொன்றதாக மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உசிலம்பட்டி அருகேயுள்ள கோடாங்கி நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மொக்கராசு – பெருமாயி தம்பதி. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மொக்கராசு உயிரிழந்த நிலையில், பெருமாயி அவரது மகன் ரமேஷுடன் வசித்து வந்துள்ளார்.
மது போதைக்கு அடிமையான ரமேஷ், பெருமாயியிடம் பணம் கேட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ரமேஷ் நேற்று பணம் கேட்டபோது, பெருமாயி மறுத்ததால் ஆத்திரமடைந்த ரமேஷ், பெருமாயியை அடித்து உதைத்துள்ளார்.
இதில் மயங்கி விழுந்த பெருமாயி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரமேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள் ளனர்.
தாயை பெற்ற மகனே அடித்து மிதித்து கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது








