தூத்துக்குடி அருகே தண்ணீர் லாரி – வேன் மோதிக்கொண்ட விபத்தில் நான்கு பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் பகுதியில் உலர் பூக்கள் ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்களை, மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் இருந்து வாகனங்கள் மூலம் அழைத்து வருவது வழக்கம். அதன்படி இன்று காலை, பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு, ஓட்டப்பிடாரம் தாலுகா புதியம்புத்தூர் அருகே வேன் வந்துகொண்டிருந்தது.

சில்லாநத்தம் பகுதியில் வந்தபோது எதிரே தண்ணீர் லாரியும் வேனும் எதிர்பாராதவிதமாக மோதின. மோதிய வேகத்தில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது. வேனில் இருந்த செல்வராணி, சந்தான லட்சுமி இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். தகவல் அறிந்து வந்த புதியம்புத்தூர் போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு கொண்டு செல்லும் வழியில் மணிமேகலை என்ற பெண் உயிரிழந்தார். மேலும் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளார்.
வேன் ஒட்டுனர் பாபு, லாரி ஒட்டுநர் பண்டாரம் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 3 பெண்கள் கவலைக்கிடமாக உள்ளனர். விபத்து நடந்த இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் நேரில் சென்று விசாரணை செய்தார். புதியம்புத்தூர் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.








