குற்றாலம் அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை!

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று (டிச.16) இரவு கொட்டி தீர்த்த கனமழையால்  குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை…

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று (டிச.16) இரவு கொட்டி தீர்த்த கனமழையால்  குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த  கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டு வருகிறது.

அந்த வகையில், குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வரும் சூழலில், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மழை குறைந்து குற்றால அருவிகள் தண்ணீர் வரத்து சீரான பின்னர்
சுற்றுலா பயணிகள் வழக்கம் போல் குளிக்க அனுமதி வழங்கப்படும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.