அடுத்த 30-40 ஆண்டுகள் பாஜகவின் காலமாக இருக்கும்- அமித்ஷா

அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் பாஜகவின் காலமாக இருக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.  பாஜகவின் செயற்குழு கூட்டம் 2வது நாளாக ஐதாராபாத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி நரேந்திரமோடி, உள்துறை…

அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் பாஜகவின் காலமாக இருக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 

பாஜகவின் செயற்குழு கூட்டம் 2வது நாளாக ஐதாராபாத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்பட பலர் கலந்து கொண்டன்.

இந்த செயற்குழு கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் 2024ம் ஆண்டுக்குள் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் காணப்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும். அசாம் மற்றும் மேகலாய மாநிலங்களுக்கு இடையில் கடந்த 50 ஆண்டு காலமாக இருந்த எல்லை பிரச்னை கடந்த மார்ச் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் முடிவுக்கு வந்துள்ளது. இரு மாநில முதல்வர்களும் இதில் கையெழுத்திட்டு எல்லை பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளனர்.

அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் பாஜகவின் காலமாகவே இரக்கும். இந்தியா உலக நாடுகளின் தலைமையாக மாறும். குடும்ப அரசியல், ஜாதி ரீதியிலான அரசியல், ஒருசாராரை திருப்திபடுத்தும் அரசியல் ஆகியவை மிகப்பெரும் பாவங்களாக உள்ளன். இந்தியா பல ஆண்டுகளாக துன்பத்தை அனுபவிக்க இதுவே காரணமாகும் என்று கூறினார்.

தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு குறித்து அசாம் முதலமைச்சர் ஹிமந்த் பிஷ்வா ஷர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில், தென் மாநிலங்களான ஆந்திரா, தமிழகம், தெலங்கானா மாநிலங்களில் பாஜக விரைவில் அதிகாரத்தை பிடிக்கும். மேற்கு வங்காளம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் நடந்து வரும் குடும்ப ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும். எதிர்கட்சியினர் சிஏஏ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தற்போது அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்கட்சிகள் பாஜக அரசங்காத்தால் கொண்டு வரப்படும் பல நல்ல திட்டங்களை அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கின்றனர் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.