விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் படுகாயத்துடன் மீட்டுபட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், கோட்டநத்தம் கிராமத்தில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறையின் லைசென்ஸ் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் 40 அறைகள் உள்ளன. அங்கு சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் உள்பட, சுமார் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் கன்னிச்சேரி மற்றும் கட்டனார் பட்டியைச் சேர்ந்த முத்துப்பான்டி , கருப்பையா ஆகிய இருவர் உள்பட 4 தொழிலாளர்கள் இன்று காலை பேன்சி ரக பட்டாசுக்கு திரி சுற்றும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பட்டாசு திரியில் தீடீரென்று உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் திரி சுற்றும் பணியில் ஈடுபட்டு இருந்த முத்துப்பான்டி , கருப்பையா ஆகிய 2 பேர் வெடி விபத்தில் சிக்கி உடல் கருகினர். மற்ற இருவரும் 80 சதவீத தீ காயத்துடன் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருதுநகர் மாவட்ட தீயணைப்பு துறை வீரர்கள் தீ மேலும் பரவாமல் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா