உலகமே உற்று நோக்குகின்ற இடமாக கீழடி மாறியுள்ளது- அமைச்சர் அன்பில் மகேஷ்

முதலமைச்சர் கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தப்பிறகு ஒட்டு மொத்த உலகமே உற்று நோக்குகின்ற இடமாக கீழடி மாறி இருக்கிறது என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கொந்தகை கிராமத்தில்…

முதலமைச்சர் கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தப்பிறகு ஒட்டு மொத்த உலகமே உற்று நோக்குகின்ற இடமாக கீழடி மாறி இருக்கிறது என கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் கொந்தகை கிராமத்தில் கீழடி அருங்காட்சியகத்த்தில் பள்ளி கல்வித் துறை சார்பில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான தொல்லியல் பயிற்சியினை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதலமைச்சர் கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தப்பிறகு ஒட்டு மொத்த உலகமே உற்று நோக்குகின்ற இடமாக கீழடி மாறி இருக்கிறது. வரலாற்று துறையில் தொல்லியல் மீது ஆர்வம் உள்ள ஆயிரம் ஆசிரியர்களுக்கு தொல்லியல் ஆய்வாளர்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஆசிரியர்களுக்கு கீழடி அருங்காட்சியத்தில் நானகு நாட்கள் பயிற்சியும், இரண்டு தினங்கள் களத்திலும் பயிற்சி வழங்கப்படும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பள்ளி கல்வித்துறை சார்பில் நடைபெறும் மாநில அளவிலான கல்வி சுற்றுலாவில் கீழடியும் இடம் பெறுவதற்கான திட்டத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். பள்ளிகளில் அரசு விதிமுறைக்குட்பட்டு விளையாட்டு மைதானம் அமைந்திருக்க வேண்டும். வாரத்தில் இரண்டு உடற்கல்வி வகுப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.