டைமண்ட் லீக் தடகள போட்டியில், சாதனை படைத்த நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தொடர் வெற்றிகள் தடகளம் செய்து வரும் பெரும் முன்னேற்றத்தை காட்டுவதாக தெரிவித்துள்ளார்.
சுட்சர்லாந்து நாட்டின் சுரிட்ச் நகரில் டைமண்ட் லீக் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், ஈட்டி எறிதல் போட்டியில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, 88.44 மீட்டம் தூரம் வரை ஈட்டியை எறிந்து டைமண்ட் லீக் சாம்பியன் பட்டத்தைச் தட்டிச் சென்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதன் மூலம் டைமண்ட் லீக் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார் நீரஜ் சோப்ரா. ஈட்டி எறிதல் வீரர் தனது இரண்டாவது முயற்சியில் 88.44 மீட்டர் எறிந்தார். இந்தத் தொலைவு அவரது வெற்றிக்கு போதுமானதாக அமைந்தது.
நீரஜ் தனது இரண்டாவது முயற்சியில் 88.44 மீ எறிந்தார், அதைத் தொடர்ந்து தனது மூன்றாவது முயற்சியில் 88 மீட்டர் மற்றும் நான்காவது முயற்சியில் 86.11 மீட்டர் எறிந்தார். நீரஜின் ஐந்தாவது முயற்சி 87 மீட்டரும், கடைசி முயற்சி 83.6 மீட்டரும் பதிவு செய்தார். சாதனை படைத்த நீரஜ் சோப்ராவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Congratulations to @Neeraj_chopra1 for scripting history yet again by becoming the first Indian to win the prestigious Diamond League Trophy. He has demonstrated great dedication and consistency. His repeated successes show the great strides Indian athletics is making. pic.twitter.com/dlkXU77Xt5
— Narendra Modi (@narendramodi) September 9, 2022
அந்த வகையில் பிரதமர் மோடி டிவிட்டர் பதிவில் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், டைமண்ட் லீக் டிராபியை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை நீரஜ் பதிவு செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அவரது சிறந்த அர்ப்பணிப்பு மற்றும் நிலைத்தன்மையை இது வெளிப்படுத்துவதாகவும், தொடர்ச்சியான வெற்றிகள் இந்திய தடகளம் செய்து வரும் பெரும் முன்னேற்றங்களைக் காட்டுகின்றன என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் டிவிட்டர் செய்துள்ள நீரஜ் சோப்ரா, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து, நமது மகத்தான தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது பெருமையாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
– இரா.நம்பிராஜன்