சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் பாலம் கட்டுவது குறித்தும், கோயிலுக்கு மின்சாரம் வழங்குவது குறித்தும் ஆய்வு செய்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி கோயில் அடிவாரப் பகுதியில் ஆய்வு செய்த பின் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மின்சார வசதி இல்லாததால் மின்சார வசதி வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று ஆய்வு செய்ய வந்துள்ளேன் என்று தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தற்போது இந்த பகுதி புலிகள் காப்பகமாக மாற்றப்பட்டு உள்ளதால் மத்திய அரசுடன் அனுமதி பெற வேண்டி உள்ளது. அதிகாரிகளை இது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளேன். ஆய்வு செய்த பின் மின்சாரம் வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சதுரகிரி கோவிலுக்கு செல்லும் ஓடைகளில் பாலம் கட்டும் பணி குறித்து முறையான ஆய்வு செய்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பீட்டா அமைப்பு வெளிநாட்டில் இருந்து பணம் வாங்கிக் கொண்டு இது போன்ற செயல்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜெயமால்யதா யானை நன்றாக உள்ளது எந்த பிரச்சனையும் இல்லை. கடந்த அதிமுக அரசு 6 லட்சம் கோடி கடனை விட்டு விட்டு சென்றுள்ளது. தமிழக முதலமைச்சர் இந்த கடனை சரி செய்வதற்கு பொருளாதார நிபுணர்களை நியமித்துள்ளார். பல்வேறு புதிய திட்டங்களையும் தற்போது கொண்டு வந்துள்ளார். தமிழகத்தில் பெண் குழந்தைகள் உயர்கல்வி படிக்க வேண்டும் என ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் அறிமுகப்படுத்தியுள்ளார் என்று கூறினார்.