ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை அழிக்க நடவடிக்கை- மீன்வளத்துறை அதிகாரிகள் உறுதி

நியூஸ் 7 செய்தி எதிரொலியாக, தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில், தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு காரிமங்கலம் பகுதிகளில்…

நியூஸ் 7 செய்தி எதிரொலியாக, தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில், தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு காரிமங்கலம் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட மீன் பண்ணைகளில் மத்திய, மாநில அரசுகளால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி வகை மீன்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இவை, வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் பிற நீர்வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்தை விளைவிக்க கூடியவை. தன்னுடன் வாழும் மற்ற வகை மீன்களை ஒட்டுமொத்தமாக அழித்துவிடும் திறன் கொண்டவை. இந்த மீன்களை சட்டவிரோதமாக வளர்த்து வருவதாகவும், இதை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக, நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக பேசிய மீன்வளத்துறை உதவி இயக்குனர் கோகுல ரமணன், ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதுதொடர்பாக மீன்கள் பண்ணை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.